தவறா ? தவறான தவறா ??

தவறித் தவறாக
தவறிய தவறுகளை
தவறான தவறாக கருதாமல்
தவறாக நினைப்பது
தவறான தவறேயாகும் !
தவறான தவறுகளை
தவறாக கொள்ளாமல்
தவறன்றி வேறொன்றாய்
தவறின்றி கொள்தல் - தவறல்ல,
தவறன்றி வேறோன்றே என்பது
தவறா ?
தவறான தவறா ??

எழுதியவர் : வினோதன் (19-Nov-12, 4:09 pm)
பார்வை : 257

மேலே