"அம்மா" என்ற "அன்னை"
முத்தும் சொத்தாமோ ?
முல்லையும் மலராமோ?
தென்னையும் மரமாமோ? - அம்மா,
எல்லாம் நீயாமோ!
கனியும் இனிமையதோ?
கரும்பும் விரும்புவதோ?
அரும்பும் அழகுடைத்தோ? - அம்மா,
அனைத்தும் நீயாமோ!!
பாலும் புனிதமதோ?
பன்னீரும் தண்மையதோ?
பவளமும் ஒளியுடைத்தோ ? - அம்மா,
பலவும் நீயாமோ !!!
அன்பாலே என்பதுவோ?
பண்பாலே தசையதுவோ?
பாசமே குருதியதோ? - அம்மா நின்
நேசத்தின் நிகரெதுவோ !!!!
நற்றவமும் பெரிதோ?
நானிலமும் நன்மையதோ?
வானுலகும் வனப்புடைத்தோ? - அம்மா,
அனைத்தும் நீயாமோ !!!!!
கற்றதும் கல்வியதோ?
பெற்றதும் பட்டமதோ?
மற்றதும் மதிப்புளதோ? அவையெல்லாம்,
சற்றும் உனக்காமோ!!!!!!
பாலு குருசுவாமி.