சும்மா சும்மா பொம்மையா கொடுப்போம்

கார்த்திகைக் குளிரில்
கணவன் கால் ஒதுக்கி
சாத்திய கதவினை
சத்தமின்றித் திறந்து
காத்திருக்கும் பாலை
மேடையில் வைத்து
வாசல் தெளித்து
கோலம் போட்டு
காப்பி பலகாரம்
பதமாய் சமைத்து
குழந்தையை எழுப்பி
குளிப்பாட்டச் செய்து
கும்பிடும் தெய்வம்
தன்னை நினைந்து
குறுகிய தெருவில்
நடையாய் நடந்து
தாயின் வீட்டில்
தளிரதை விட்டாள்
தாயவள் பாவம்
தவித்துப் போனாள்.
தாத்தா தயவில்
குழந்தை சிரித்திட
காப்பகம் சென்று
விட்டிடும் நேரம்
அம்மா வேண்டும்
என்றே மருகிடும்
குழந்தைக்கு நாம்
சும்மா சும்மா
பொம்மையா கொடுப்போம்

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (21-Nov-12, 3:53 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 131

மேலே