கனவுத் தோழா

நீ அதட்டி பேசி கண்டதில்லை

ஆறுதலுக்கோ எட்டி நின்றதில்லை.

துயரங்கள் தொலைய காண்கிறேன்

உன் அருகாமையில்..

குழப்பங்கள் குலைத்து விடுகிறாய்

ஒரு புன்னகையில்...

நாம் விழியாய் நேசிக்கும் கவியே

நம் நட்புக்கு வழியாய் அமைந்து விட..

காலத்தின் கையில் சிக்கி

நான் காணாமல் போனால்

உன் கவி எடுத்து படித்துப் பார்

அதில் கற்பணையாய் நானிருப்பேன் ! !

எழுதியவர் : Revathi (21-Nov-12, 6:12 pm)
பார்வை : 446

மேலே