பள்ளிக் கட்டணங்கள்

டென்சன கெலப்பாதே நீ
டென்குவா நா கடிச்சிப் போடுவேன்.....!

எல்லாத்தையும் அடகுவச்சி
எல் கே ஜியிலே சேர்த்தாச்சி.....!

இன்னும் பீச கொடுன்னா
எங்க அப்பா எங்க போவாரு..?

டொனேசன் நன்கொடை
லொட்டு லொசுக்கு

அம்புட்டையும் வாங்கிப் புட்டு
பழைய பாடாவதி பஸ்சுக்குள்ளே...

பாடை கட்டி நீ கூட்டி வருவே...
பள்ளத்துக்குள்ளே பஸ் இறங்க...

பொதுக்கடீர்னு நான் விழுவேன்...
சரித்திரம் படிப்பேன்னு
சந்தோசமா அனுப்புராவ.......

சாவுமணி அடிக்காதீங்கப்பா.....
சந்தோசமா பாடம் சொல்லித் தாங்க....

கொஞ்சம் பீச குறைச்சா
எங்க வவுத்துலே கஞ்சித் தண்ணி சேரும் சாமி...!

எழுதியவர் : ரஞ்சிதா (21-Nov-12, 10:25 pm)
பார்வை : 124

மேலே