தவறான எண்
இந்திய கைபேசியே
என் காதலை சொல்லிடுவாய்
பிறநாட்டு காதலெல்லாம்
பிரமாதமாய் வெற்றிபெற
நான் கொண்ட காதல் மட்டும்
நம்மோடுதான் இருக்குது சொல்லேன்
செல்லா செய்தியாய் (draft )
சிலவல்ல பலவாய்
தொலை தொடர்பு வழியினில்
தொடங்கட்டும் பயணம்
துண்டிக்கப்படும் தொடர்பெல்லையில் அவள்
தண்டிக்கப்படும் தனிமையினாலே நானே
தத்துவம் சொன்னேன்
" தவிக்கட்டும் கைபேசி - அவள்
தலையிலிருந்து விழும் முடியாய் "
அற்புதமாக நான் குறும்செய்தி அடித்து
அவள் எண்ணுக்கு அனுப்பினால்
இல்லை எந்த பதிலும்
இருக்காது அவள் எண்
இருந்தாலும் அனுப்பிவிட்டேன்
உரையாட தைரியமில்லை எனக்கு
உளறிவிட்டால் அவள் காதல் இல்லை என்று
அற்புதமென்றேன் ஆகா ...ஆகா வென்றேன்
அதிசயம் தான் என்று கைபேசிக்கு முத்தமிட்டேன்
உள்வரும் குறும் செய்தி பெட்டகதிலே ஒரு
உயிரே வந்து காதல் படிக்கும் என்றால்
மாறிய எண்ணினால் - பல
மாதமாய் தொந்தரவு கொடுக்கும் மதிகெட்டவனே
அறுபது என்வயது அறிவாயடா
ஆனாலும் பெண்தான் உணர்வாயடா
பல காலமாய் எனக்கு பார்வை கோளாறு - அதனால்
படிக்க முடியவில்லை உன் குறும் செய்தியை
நேற்றுதான் கண் கண்ணாடி மாட்டினேன் - உன்
நிரம்பி வழிந்த குறும் செய்தி கண்டிட்டேன்
மறுபடியும் அனுப்பினால் உன்
மரியாதையை கெடும் மாநில குற்ற பிரிவில் உன் பெயரும் சேரும்
இந்திய கைபேசியே
இப்படிதான் உன் உதவியா ?