குறிஞ்சிமலர்

துரித உணவகம்,
புல்லெட் ரயில்கள்,
சூப்பர் சானிக் விமானங்கள்,
விரைவுப் பேருந்துகள்
மூன்று வருடத்தில்
காய்க்கும் தென்னை,
மாமரங்கள்,என
உலகம் பூராவும்
ஓடிக்கொண்டிருக்கையில்
குறிஞ்சி மலரே !
நீ மட்டும் ஏன்
பன்னிரண்டு ஆண்டுகள்
காக்க வைத்து மலர்கிறாய்?
நீ என்ன ?முடிவை சொல்ல
என்னைப் பலகாலம்
காக்க வைத்த என்
காதலியா?

எழுதியவர் : கோவை ஆனந்த் (25-Nov-12, 11:31 pm)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 142

மேலே