..........தோழனோ தோழியோ...............
முகம் தெரியாது பழக நேர்ந்தது,
பழகியதில் உன் அகம் அவ்வளவு அழகு,
அரூவமாய் எனக்குள் சிருஷ்டிக்கப்பட்டாய் நீ,
என் வழித்தடங்களுக்கு நல்லதொரு துணையாய்,
இல்லாமல் இருக்கும் உன்னால் எத்தனை மாற்றங்கள்,
அர்த்தமும் ஆணித்தரமுமாய்,
ஆமாம்,
எதற்குப் பார்க்கவேண்டும் உனை நான்?
இருந்துவிடேன் கண்ணுக்குத்தெரியாத கடவுள்போலவே என்னுடன்!!
இங்கே நான் நன்றி சொல்லியாகவேண்டும்,
உன் உறவை ஒளிபடத்தந்த முகநூலுக்கு........................