மோனாலிசா உன் சிரிப்பின் விலை இவ்வளவுதானா ?

மோனாலிசா ஓவியம்
வழக்கம் போல் சிரித்த படி.....!

விழுமா ஒத்தை ரூபா என
பசியில் வாடியபடி

அவள் புன்னகையை ரண வேதனையோடு
ரசிக்கும் அந்தப் படம் வரைந்த
ரோட்டோரப் பிச்சைக் காரன்...!

அவள் சிரித்த படி இருந்தாள் - பாவம்
அவன் அழுத படிதான் இருந்தான்.....!

( இன்னும் யாரும் தர்மம் போடவில்லை )

கண்டு கொள்ளாத மனித நேயங்கள்....!

எழுதியவர் : (27-Nov-12, 10:44 pm)
பார்வை : 141

மேலே