கார்த்திகைத் திருநாள்

கார்த்திகை திங்களில் ஒரு நாளாம்
கிருத்திகை நாளது வரும் நாளாம் - அந்நாள்
தீபங்கள் ஏற்றும் பெரு நாளாம்

திருவண்ணமலையில் தீபம்
தெரு வாசல் தோறும் தீபம்
எங்கும் ஒளிரும் தீபம் - என்றும்
வாழ்வினில் ஒளிதனைக் கூட்டும்

அண்ணாமலையார் தீபம் - அவன்
அருளால் ஒளியே பேசும்
பரணி தீபமாம் ஒளி தீபம் - அது
பஞ்சம் போக்கிடும் தீபம்

உயர்ந்த மலையினில் தீபம்
வான் தொட ஒளிரும் தீபம்
நிமிர்ந்து நோக்கும் தீபம் - கண்டால்
நிம்மதி வாழ்வினில் கூடும்

"ஓம்" என்று சொல்லியே தீபம் - தினம்
ஈசன் முன் ஏற்றுவோம் தீபம்
"நான்" எனும் அகந்தை அழித்தே - நாம்
நாளும் ஏற்றுவோம் தீபம்.

எழுதியவர் : சொ. shanthi (29-Nov-12, 11:08 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 100

மேலே