அவரின் தந்தைக்கு...இறுதி அஞ்சலி
அன்புள்ள ஆத்மாவிற்கு,
முகமறியா நல்லிதையம்
உங்களுக்காக -
முதலும் கடைசியுமான
கடிதத்தின் .
ஊடே
என் கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்!.
நேரில்
இதுவரையில் தரிசித்தத்தில்லை .
ஆயினினும்-
இதுநாள் வரையும்
தங்களை நித்தமும்
தரிசித்துக்கொண்துதான் இருக்கிறேன் -
சூரியனை பார்க்கும்போதேல்லாம்...
நீங்கள்தான் என்று ,.....
இனிமேலும் அப்படித் தான்...
உங்களுக்கு தெரியுமா ?
அத்தையின் அழகு
நெற்றியில் தாங்களிட்ட
குங்குமத்தின் அழகில் லயித்து
பலமுறை என்னை
அவ்வாறு
பெரிய திலகமிட்டு-
அலங்கரித்துக்கொண்டுள்ளேன்.
இனிமேல் எப்படி?
மகனின் மௌனமும்
அவரின் குணாதிசியங்களும் தங்களை
பலமுறை
காயபடுத்தியிருந்தால் -
தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் மாமா..
(இப்படி அழைப்பது என் மனதிற்க்கு சுகமாக இருக்கிறது...)
புதுவீட்டின் சாவியில்
தங்களின் கைரேகைதான்
முதலில்
பதியவேண்டும்
என்று ஆசைப்பட்ட
அவரை ஏ ன் ஏமாற்றிவிட்டீர்கள் !!
ஒரே ஒரு ஆசைதான் ..........
அடுத்த ஜென்மத்திலாவது
தங்களுக்கு ஒரு
குவளை நீர்முகந்து தரும் பாக்கியம்
நல்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் .
இப்படிக்கு தங்களை காண
இயலாமல் போன
அபாக்கியவதி..