இலக்கணப் பறவைகள்!!!

சாதி, மத பேதமில்லை எங்கள் குல தேசத்தில்;
ஒழுக்கம் கெட்டு போவதில்லை எங்கள் குல தேசத்தில்!!!
வெகு தூரம் சென்றாலும் வேறு துணையைப் பார்ப்பதில்லை;
ஒரு துணையை இழந்தாலும் மறு துணையை நினைப்பதில்லை!!!
இயற்கையோடு இன்று வரை இணைந்திருந்து பறக்கின்றோம்;
மனித குல மாக்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்கின்றோம்!!!