புதிய மனிதா பூமிக்கு வா..!!

என்றோ ஒருநாள் நடக்கும்
நீ கண்ட கனவுகள்..!!!

வாழ்க்கையின் தூரங்களை,
சுடு பால் கண்டு அஞ்சி நிற்கும்
பூனை போல் அல்லாமல்,
பாய்ந்து கடக்க துடி..!!!

எத்தனை துயரங்கள் தேடி வந்தாலும்
அதை தலை குனிந்து ஏற்று கொள்,
உனக்கு வாய்க்க பெற்ற வரமாக..!!!

எதிரிகள் உன்னை சாபமிட்டு
அழிக்க பார்க்கலாம்,
நிமிடங்கள் உன்னை விட்டு
கடந்து போகலாம்,
வாய்ப்புகள் வாசல் வரை வந்து
கையசைத்து செல்லலாம்,

எது நடந்தாலும் உனக்கென்ன என்று
அமுக்கி வைத்த ஆலமர விதையாய் இரு..!
ஒருநாள் நீயும் வருவாய்..!!!

உன்னை மிரட்டிய வரிகள்
ஒருநாள் உன் அடி பணியும்,
உனக்கு ஆறுதல் தந்த வார்த்தைகள்
உன்னால் பெருமை கொள்ளும்.

நீ ஏறிகொண்டிருக்கும் ஏணியை,
யார் வேண்டுமானாலும் உடைக்கலாம்..
பயப்படாதே..!!

உலகின் கடைசி சென்றாவது,
உனக்கென ஒரு பாதை போட்டால்
உன் பின்னால் வருவார்கள்
ஏணியை உடைத்தவர்கள் ..!!

வாழ்வதற்கு நாட்களை எண்ணாமல்,
சாவதற்கு நீ துணிந்து விட்டால்
விதி கூட உன்னை தொட மறுக்கும்..!!!

புதிய மனிதா
உனது பூமிக்கு வா..!!!
உனக்காக வரலாற்றின் பக்கங்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன,
உன் பெயரை சுமப்பதற்கு...!!

எழுதியவர் : மனோ ரெட் (30-Nov-12, 1:54 pm)
பார்வை : 165

மேலே