வெடிகுண்டுகளுக்கு இதயம் இருந்தால்...

இதயங்களை சிதறடிக்கும்
இதிகாசங்களை கலங்கடிக்கும்
அடிக்கொருதரம் வரலாறு படைக்கும் !
எம் வியர்வையில் உருவாக்கி
எம் உயிருக்கே உலைவைக்கும்
எம் அறிவியலின் விதியே !
உன்னை உருவாக்க ஓராயிரம் உயிர்கள்
நீ அழிப்பதோ ஓராயிரம் ஊர்கள்
அழிவது நீ மட்டுமல்ல உன் அன்னையும் தான் !
இயற்கை அழிவே நெஞ்சிலிருக்க
செயற்கை தனமாய் சிதைத்து சிதறடிக்கும்
தீண்டமுடியா தீம்பழமே !
தீராத வியாதிகளால் தொல்லை கொண்டிருக்க
தீவிரவாதிகளுக்கு கைகொடுக்கும்
உயர்வுதாழ்வின்றி உயிரை பறிக்கும் !
விலைமதிப்புள்ள எம்மவர்களை
சிறுவிலைமதிப்புள்ள நீ அழிப்பது
சிரிப்பதா.. சிந்திப்பதா ... திகைக்கிறது
இவ்வுலகில் எத்தனையோ இருக்க
உன் பெயரை என் கவிதைக்கு கருவாக்கி
கற்பனை வடிக்க வைக்கும்
விந்தைமிகு வெடிகுண்டே ......
உனக்கும் இதயமிருந்தால்!
உன் அடுத்த தலைமுறையை படைக்கும்
எம்பிஞ்சுகளை நீ அழித்தால்
மனதில் வைத்துக்கொள்
உன் பிறவி விரைவில் முடியும் !