இளைய தலைமுறை நினைவில் வைக்கட்டும்!

இன்று
இலையுதிர் காலம் ஆரம்பித்து விட்டது
இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன;

என் வயது தொன்னூறு,
என் நாட்களும் ஒன்றொன்றாய்
உதிர்கின்றன;

நான் வேண்டாதவனாகிறேன்,
கவனிப்பார் யாருமின்றி
கடுப்புடன் உதாசீனப்படுத்தப் படுகிறேன்;

அவர்களை வாழ்த்த மட்டும் நான் வேண்டும்,
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்,
இளைய தலைமுறை வாழ்ந்து (விட்டுப்) போகட்டும்;

அவர்களும் ஒருநாள்
உதிரப் போகிறவர்கள் என்று
நினைவில் வைக்கட்டும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-12, 10:20 am)
பார்வை : 452

மேலே