கூத்து நாறிப் போச்சி.........
எலா... இதுநம் பொழப்பா போச்சி
ஊரு சிரிக்கிற நெளயா ஆச்சி.....
கந்துவட்டிக்கி காச வாங்கி நா(ன்).
கூத்த கட்டுன பாரு....
கண்ணீர் வடிச்சு கடைசியில் நாங்க
தெருவுல நின்ன கத கேளு....
(எலா... இதுநம் பொழப்பா)
கண்ண முழிச்சிகிட்டு கண்ணகி உடையில..
கூத்த கட்டுனம் நாம....
கூலிகேக்கயில கொறல நெளிச்சிகிட்டு
கற்ப கேக்குவா(ன்) நாட்டாம....
பட்டினி வயத்துல பாண்டிய ராச(ன்)
பாட்டுபாடினோம் நாம...
பழய சோத்துக்கும் நாதியில்லாம...
படிய..யேந்துறான் மாம(ன்).......
(எலா... இதுநம் பொழப்பா)
சின்ன பொட்டிக்குள்ள.. சீரியல் பாக்கும்..
கூட்டம் பெருகிப் போச்சி.....-நம்ம
சிலம்பு கதயெல்லாம் தெருக்கடையோரம்
கூனி...குறுகி நின்னாச்சி.......
ஏட்டுக்கல்வியில சோத்த திங்கதான்...
கத்துக்கிச்சி காலம்....-வெறும்
பாட்டுகட்டுற பாவ பொழப்ப விட்டு
வாழ்க்க எப்ப மீளும்.......
(எலா... இதுநம் பொழப்பா)
அண்ணாச்சி..கடையில பொட்டலங் கட்டி........
பொழப்ப நடத்துற கையி.....-அது
அந்தி சாய்ஞ்சதும் மத்தளம் வாசிக்க..
மறக்க மறுக்குது மெய்யி.......
சலங்க கட்டிகிட்டு வீரம்சொட்ட சொட்ட
பாடி...ஆடுன... ஆளு.....
சினிமா..கொட்டக வாசல்ல நின்னு
சூவ.... தொடச்ச கத கேளு.......
(எலா... இதுநம் பொழப்பா)
எலா... இதுநம் பொழப்பா போச்சி
ஊரு சிரிக்கிற நெளயா ஆச்சி.....
(எலா... இதுநம் பொழப்பா)