நீ எனும் Naan
ஊற்று நீரின் சக்தியை உலகுக்கு உணர்த்த
வூருக்குள் புகுந்த வெள்ளம் நீ
உயர்வின் உத்திரவாதத்தை உழைப்புக்கு
உரைக்க வந்த நெற்றி வியர்வை நீ
ஒலிக்கும் மவுனதுக்கும் இடையே
ஒளிந்து மயக்கும் இசை நீ
முதல் பக்கத்தில் நமஸ்கரித்து
அந்தியிலே ஆசிர்வதிக்கும் புதினம் நீ
தளர்ந்து போகையிலே நம்பிக்கையை
வார்த்தைகளில் தரும் வரம் நீ
உள்ளபடி உன் உயரம் உச்சந்தலை மட்டும்
உள்ளத்தின் உயரமோ இமயத்தை எட்டும்
மனதை வெற்றிடமக்கு மகிழ்சிக்கற்று
வந்து நிரம்பட்டும்,நீ
கற்றதனால் பயன் கல்லாதார்க்கும் உயர்வு
பெற்றதனால் பயன் இல்லார்க்கு இறக்கம்
கற்றதை கடந்த பாதியாக்கி
கள்ளத்தை நோக்கியே உன் பயணம்
எளியார்க்கு பணிதிடவே உனக்கு கண்கள்
எதிலர்க்கு பணிந்திடவே உனக்கு சிரம்
எல்லா நிலையிலும் நீ நகை கொள்வாய்
எல்லையில்லா நிலை கொள்வாய்
அன்பு எனும் அமுதை அனைவர்க்கும் வைத்தான்
உள்ளம் என்றாய் அதற்கு பெயர் வைத்தான்
உன்னை அறிவாய் ,உள்ளம் அறிவாய்.