அறிஞர் அண்ணாவின் சமயோசிதப் பேச்சு!

அறிஞர் அண்ணா மிகச் சிறந்த அறிவாளி என்பதில் ஒருவருக்கும் ஐயமிருக்காது! சமயோசித மாகப் பெசுவத்தில் மிகவும் கை தேர்ந்தவர் .

ஒருமுறை விழுப்புரத்திற்கு அவர் பேச வந்தபோது அவர் பேசியதைக் கேளுங்கள்!
அப்போது தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு வரமுடிந்தது. மக்கள் ஏறக் குறைய தூங்கும் மன நிலையில் இருந்தனர்.

மேடையேறிய அண்ணா மக்களை உற்சாகப் படுத்தும் வேளையில் இறங்கினார்!

" மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!" என்றவுடன் எழுந்த
கரகோசத்தை சொல்லவும் வேண்டுமோ!

இதேபோல் தென்மாவட்டங்களில் அவர்
ஒரு கூட்டத்திற்கு அவர் பேச வந்தபோது
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காரர்கள் அண்ணா பேசும் மேடைக்கு எதிரே
ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தி மு க வினர் ஆத்திரப்பட்டனர்.அவர்களை சமாதானப் படுத்திய அண்ணா சற்றும் சளைக்காமல் இப்படி சொன்னார்.
அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை!
அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு
விளக்குமாறு பணித்திருக்கிறார்கள் ! என்று.
படம் வைத்தவர்கள் மூஞ்சியில் ஈயாடவில்லை .

வேறு ஒரு ஊரில் பேசச் சென்றபோது மேடையில் இருந்த குழல் விளக்குகள் முழுவதும் ஒரே பூச்சி களாகப் பறந்து கொண்டிருந்தது. மேடையேறிய அண்ணா
"இந்த ஊரில் பேச்சுக்கு வாய் திறப்பதா? பூச்சிக்கு வாய் திறப்பதா என்று தெரியவில்லையே!" எனக் கூறியதைக் கேட்ட மக்களின் கரகோஷம் நிற்க
நெடுநேரமாயிற்றாம்!

இப்படியெல்லாம் பேச இப்போது யார் இருக்கிறார்கள்?

எழுதியவர் : கோவை ஆனந்த் (1-Dec-12, 11:22 pm)
பார்வை : 3294

மேலே