.........டேய்...............
மறந்துவிட்டேன் அவளை,
என்ற எண்ணம் மேலோங்கி ஆட்சிசெய்தது,
என்நிலை மறந்து வழிபடுதற்கு ஆலயம் புகுந்தேன்,
அங்கே ஒரு தாய் தன் குழந்தையை அழைத்த இரு வார்த்தைகள்,
அடித்து நொறுக்கி கழுவிலேற்றியது என் புதிய நம்பிக்கையை,
அவை,
"டேய் கண்ணா"
என்று என்றோ ஒரு காலத்தில் எனை அழைத்த வார்த்தைகள்,
அங்கே மரணம் மொழிக்கில்லை என விழிகள் அழுததை,
எவரிடம் சொல்லமுடியும்?