தீபாவளி

அலாரம் வைத்து
அதிகாலை எழுந்து
எண்ணெய் தேய்த்து
எல்லோரும் குளித்து
பலகாரம் எல்லாம்
பகவானுக்குப் படைத்து
பூசை முடித்து
புத்தாடை உடுத்தி
சிற்றுண்டிக் கணக்கை
சீக்கிரம் முடித்து
பட்டாசுகள் எல்லாம்
பாவமாய்க் காத்திருக்க
தொண்ணூறு சதவிகித
மிச்ச தீபாவளியை
தொலைத்தே விடுகிறோம்
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (2-Dec-12, 8:26 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 133

மேலே