பட்டாசு

கொஞ்ச நாள் முன் செத்த
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இருபதாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வெடித்தோமே?
பணிவாகத்தான் கேட்டேன்
பட்டாசாய் வெடிக்கிறார் அப்பா!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (2-Dec-12, 8:24 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 129

மேலே