காதல் மறைத்தது ஏனோ - ( சீனு )
மலரே ஏனடி மௌனம் கலைத்தாய்
சொல்லில் ஏனோ காதல் மறைத்தாய்
கன்னி மயிலென தோகை விரித்தாய்
இறகில் ஏனடி முற்க்கள் பதித்தாய்
காதல் எனும் வீட்டை கட்டி கொடுத்தாய்
பார்க்க வந்த நேரம் பார்வை பறித்தாய்
உன் நினைவால் தினம் தினம் தூக்கம் தொலைத்தேன்
பகலை ஏனோ பார்க்க மறுத்தேன்
நீ பார்த்த பார்வையெல்லாம் பொய்யாகி போகுமோ
உன் இதழின் பொன்சிரிப்பு இல்லைஎன்றாகுமோ
உடன்பாடு இல்லையென்று உரைக்காமல் உணர்த்திவிட்டாய்
கனியும் என்ற காதலை கல்லறையில் அடைத்துவிட்டாய்
மண்ணொன்று மடிகொடுத்தால் மழைத்துளி விழாதோ
அதில் காதல் ஒலி எழாதோ !!!!.....