என் நம்பிக்கையாய்........
எதார்த்தத்துக்கும்
ஆடம்பரத்துக்கும்
இடையில்
தரையில் வீழ்ந்த மீனாய்
துடிக்கின்ற வாழ்க்கை............
தொலைதூரப்பார்வை
எங்கள் ஆட்சியாளர்களிடம் இருப்பதாய்
ஏமாந்து போன
வாழ்வின் சுவடுகள்
பட்ட மரங்களாய் ..............
வேலையின்றி தவிக்கின்ற
கோடானுகோடி இளஞர்களின் தவிப்புகள்
இன்னும் இந்த பூமியில் - கொள்கையில்லா
மலட்டு மரங்களாய் ..........
கலாச்சாரம் எல்லாம் என் கண்களுக்கு
கானல் நீராய் தெரிகிறது
அறுந்துபோன நாடித்துடிப்பாய்..........
வாழ்வுக்கும் வசந்தத்துக்குமான இடைவெளி
தற்கொலைப்பாரைக்கும்
அடுத்துள்ள மலைக்குமானதாக இருக்கிறது
இன்னும் என் சிந்தையின் ஓரத்தில்
நம் சுதந்திரப் போராட்டத்தில்
அலைமோதிய கூட்டம்
என் நம்பிக்கையாய்