தோல்வியின் காரணம் ?
சோம்பலில் ஊறி ---- அதிஷ்டம்
என சாம்பலைத் தேடி
அழைவார்கள் மகிழ்வார்கள்
எதையோ நினைத்து அழுவார்கள்
நேரத்தைப் போக்குவது
வார்த்தை மடைப்பது
கஷ்டத்தில் வாடுவது
நஷ்டத்தில் ஓடுவது
அதிஷ்டத்தை தேடிப் போவதும்
கஷ்டத்தை அழைப்பதாகும்
உழைத்தால் வாழ்வே ஆகும்
பழித்தால் இதுவே சாபமாகும்