ராஜ்ஜியத்தை இழந்த ராணிகள்.
ஆணும் பெண்ணும் சமமில்லை
அதற்கும் ஒரு படி மேல்!
அதை அறியாமல் ஆர்பாட்டம்.
புரிந்து கொள்ளாமல் போராட்டம்.
விளைவு என்னவோ விபரீதம்.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை
உள்ளதை தொலைத்து
பள்ளத்தில் விழும் முயற்சி.
ராணி போல் அமர்ந்துகொண்டு
ராஜ்ஜியம் செய்வதைவிட்டு
கூலி தொழிலாளி வேசம் போட்டு
கூட்டை விட்டு கிளம்பிவிட்டோம்
வீட்டு பணியும் செய்துகொண்டு
வேலைப் பளுவென புலம்பி கொண்டு
அடியெடுத்து வைக்கும் இடமெல்லாம்
அடிவாங்க தயாரானோம்.
அவசரமாய் சமைப்பதால்
அதில் ருசிஏதும் இல்லை
அனைவரின் குறைகளையும்
அள்ளி நெஞ்சில் பதித்துக்கொண்டோம்
பேருந்து கூட்ட நெரிசல்
இலாவகமாய் உடல் உரசல்
அடுக்களையில் சுட்டது விரல்
பேருந்தில் சுட்டதோ உயிர்.
பெண்ணென்ன பெரிதாய்
சாதிக்கப்போகிறாள்
இந்த கேவலப்பார்வையையும்
இதயத்தில் தைத்துக்கொண்டோம்
அதிகாரியின் அத்துமீறல்கள்
அத்தனையும் தாங்க தயாரானோம்.
காற்றில் பறக்கும் ஆடையை
கையில் இறுக்கி பிடித்துக் கொண்டு
கயவர்களின் கண்ணில் படாமல்
காலத்தை ஓட்டும் நாம்
ராஜ்ஜியத்தை இழந்த ராணிகள்!!!