எங்கள் பூமியை மாசுப்படுத்தாதே
எங்கள் பூமியை மாசு படுத்தாதே.....!
வே.ம.அருச்சுணன்
கொடுங்கோலனே,
நீ அழியும் காலம்
வெகு தொலைவில் இல்லை.....!
உரிமைக்காகப் போராடிய
ஆன்மாக்களை
அநியாயமாகக் கொன்று தீர்த்தாயே
புத்தம் பரவிய நாட்டின்
தலைமகனா நீ....?
மனிதத்தன்மையற்றவனே
நீ விரைவில் அழிவாய்
இது தமிழர்களின் சாபம்
பாவியே.....ஈனனே.....!
எங்கள் பூமி புண்ணிய பூமி
அத்துமீறி நுழைந்தால்
எங்கள் பூமித்தாய்
உன்னை அழித்துவிடும்.....!
எங்கள் புண்ணிய பூமியில்
உன் கால்பட்டு
புனிதப் பூமியைப் பாழ்படுத்தாதே...!
இது தொடக்கம்தான்
உலகில் நீ எங்கு சென்றாலும்
தமிழ் விந்துக்கள்
உன்னை சுட்டெரிப்பர்.....!
உலகில்
நீ இருக்கும் வரை
மரண பயத்தால் உன்
மண்டை வெடிக்கும்......!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இந்த நியதி
உன் வாழ்வில் நடப்பது
நிதர்சனமான உண்மை.....!
உயிரை ஒய்யாரமாகக் குடித்தவனே
நீ உருகுழைந்து போவாய்
இது சத்தியம்...!