இல்லறம் !

கொட்டாவியோடு,
காலையில் எழும் போதும்
கைப்பிடித்து இழுக்கும்
கணவனின் கைகளுக்குள்
மீண்டும் மூழ்கி எழுந்து ,

வேலைகள் பல விழுங்கி,
குழந்தையாய் மாறி
குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்து
வியாக்கானம் வீசிப்பேசி

விஞ்ஞானம் விலைபேசி
இடையிடையில் அலைபேசி
அடுக்களைகள் தூசி அலசி
மிச்சம் மீதி ருசியாய்த் தீண்டி...

பணி முடித்து பின்னிரவு மீண்டும்
படுக்கையில் சாய்ந்து
கால்வலியில் முனகும் போது
என்பாதம் அமுக்கும் கணவனால் .....

எழுந்து நிற்கிறது இல்லறம் !

எழுதியவர் : வினோதன் (8-Dec-12, 12:46 pm)
பார்வை : 191

மேலே