தமிழ்த்தாயை பேணுவோம்
பிறந்த குழந்தை அல்ல இவள்..
பிறந்த அன்னை....
பிறவா குழந்தைக்கும் பேச சக்தி
பிறக்கும் இவளால்.
இவளை வாசிக்க எண்ணினாலே காதல்
பிறக்கும் இவள்மேல்
இவளை நேசிக்க எண்ணுவதற்குள் ஆட்சி
செய்வாள் உயிரினுள்.
இவள் தான் எங்கள் தமிழ்த்தாய்.
எங்களது உயிர்த்தாய்!
நாங்கள் சுவாசிக்கும் காற்றிலும்
இவளது ஆட்சியே!
இவளைத் தெரியாதவர்களும் புகழ்வார்கள்
இவளது அழகுகண்டு.
தெரிந்தவர்கள் சிலர் இவளை இகழ
பழகிக் கொண்டனர்போலும்.
தாயைத் தெரியாது என்பதில்
பிறக்குமோ கௌரவம்?
தாயை ஒதுக்கி,உயர எண்ணினால்
கிட்டுமோ நற்பயன்?
முதியவள் என்பதனால் முதியோர்
இல்லத்தில் சேர்க்கலாமோ?
ஆளுமை என்பதனால் ஆங்கிலத்தை
சொந்தம் கொண்டாடலாமோ?
பிழைப்பிற்காக ஆங்கிலம் இருப்பதில்
பிழை அன்று.
உழைப்பு முடிந்ததும் தாயிடம்
வருவதும் கடினமன்று..