கருப்பழகி

உள்ளத்தின் வெள்ளை
வெளியே தெரிவதில்லை!
உடலின் கருப்பால் நான்
கருமையடையவில்லை!

வெல்லம்போல் இனிப்பாக
வெளியே பேசினாலும் ,
உள்ளத்தில் க(டு) ருமை கொண்டு
உள்ளூர ஒரு மிருகமென
ஊர்மெச்ச வாழ்பவர்கள்!

எத்தனையோ பேர்களெல்லாம்
எப்படியோ வாழ்கையிலே
உலகத்தின் பார்வையிலே
உன்னதமானவள் நான்!

கருப்பான மேனி பற்றிக்
கதை கதையாய்க் கூறி எனை
கலங்க வைக்கும் மானிடரே!
இனிப்பான என் வெள்ளையுள்ளம்
என்றுதான் உணர்வீர்கள்?

எழுதியவர் : கோவை ஆனந்த் (8-Dec-12, 4:31 pm)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 528

மேலே