திரும்பிப் பார்க்கிறேன் - புரிதல்

வாழ்க்கையில் புரிதல் என்பது அவரவர் சிந்தனை, சூழ்நிலை, மனநிலை, கற்ற பாடங்கள், கிடைத்த சிறு அனுபவங்கள், யோசிக்கும் திறன், ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
இதில் தொடக்கம் ஒரு பிரச்சினையாகவே இருக்கும்.
இயல்பான விவாதம் என்னவெனில் “அழகு -- பொருளிலா, புரிதலிலா” என்பதுதான்.
“அழகு என்பது
படைப்பில் (பொருளில்) உள்ளதா அல்லது
பார்வையில் (புரிதலில்) உள்ளதா” என்பதுதான்.
அதாவது சற்றே ஆழமாக சென்றால்,
புரிதல் என்பதின் “தொடக்கம் என்ன?” என்பதுதான் கேள்வியாக மிஞ்சும்.
அதில் விவாதம் வரும்போது,
புரிதலின் பக்கமும் நியாயம் இருப்பது போல தோன்றும் அதே நேரம் படைப்பின் பக்கமும் நியாயம் இருப்பது போல தோன்றும்.
உதாரணம்:
ஒரு பெண் ”நான் அழகாக இருக்கிறேனா, அல்லது அழகாக தெரிகிறேனா?” என்றால் ஒரு காதலனுக்கு பாதுகாப்பான பதில் என்னவாக இருக்க முடியும்?
“நீ அழகாக இருக்கவும் செய்கிறாய், அழகாக தெரியவும் செய்கிறாய்” என்பதுதானே ஒரு காதலனுக்கு பாதுகாப்பான ஒரு பதிலாக இருக்க முடியும்!
என்ன வேறுபாடு, அழகாக இருப்பதற்கும் அழகாக தெரிவதற்கும் ?
அழகாக இருப்பது என்பது – படைப்பு, இயல்பு, உள்ளது, அவளின் பெருமை
அழகாக தெரிவது என்பது – புரிதல், சிந்தனையில் தோன்றுவது, உணர்வது, அங்கீகாரம் மூலம் அவளுக்கு கிடைக்கும் திருப்தி
அழகாக இல்லாமல், அழகாக இருப்பதாய் உணர்வது எப்படி? ---- அது பொய்யா? ---விளக்கம் தேவை அல்லவா?
இங்குதான் புரிதலின் தொடக்கம் குறித்த கேள்வி மிஞ்சுகிறது.
(புரிதல் என்பது தூண்டப்படும் உணர்வும் அதன் திருப்தி தரும் அளவு நிலையும்) (இந்த நிலை பகுத்தறியும் மனதின் மூலம் மட்டுமே அடைய முடிகிறது. ஆனால் இவை எல்லாம் அனிச்சையாக நடப்பதால் நாம் இவற்றை உணர்வதேயில்லை (இதற்கு மேல் இந்த விளக்கவுரையை தொடர முடியாது)
உதாரணம்: ஒரு பொருள் திடமா அல்லது திரவமா? அது திரவமாய் இருப்பதால் அவ்வாறு உணர்கிறோமா அன்றி நாம் உணர்வதால் அது அவ்வாறு உள்ளதா? எது முதல்--- படைப்பா அன்றி உணர்வா?
இதில் சமன் படுத்துவது நமது பகுத்தறியும் மனம்தான். ஏனெனில் இருபக்கமும் இருப்பு (இயல்பு) உள்ளது.
குழந்தைக்கு தீ சுடும் என்று அனுபவித்து உணர்வதை கற்றுக்கொள்ள நேரம் தேவைப்படுகிறது.
உணர்ந்த பின் தீயும் சுடுகிறது அதன் புரிதலிலும் பதிகிறது.
தீ சுடாத போது சுடுவதாக உணர்வது எப்படி? முடியாதல்லவா? தீ சுட்டே தீரும் அது அதன் இயல்பு.
எனவேதான் அழகு பொருளிலும் இருக்கிறது. அதாவது தீ என்பது இயல்பாகவே சுடுவதுதான். இது படைப்பில் இருக்கும் அழகு போல… அந்த பெண் இருப்பதுவே அழகாக என்பது போல.
சரி…. சுடுவதாக உணர்ந்தும் தீ சுடாமல் இருப்பது எப்படி?

இது உணரும் சூட்டை மறைத்து வெளிக்காட்டும் தாங்கும் சக்தி போல அல்லது தீயின் தன்மையில் போதாத தனம் இருப்பது போல,
அந்த பெண் அழகு என்று உணர்ந்தும் அதை வெளிக்காட்டாதது போல அல்லது அவளின் அழகில் மன மயக்கம் வர தயங்குவது போல.

சரி…. இங்கு புரிதலின் தொடக்கம் எனும் கேள்வி எங்கு வந்தது?
ம்ம்ம்… அவளின் அழகு அந்த காதலன் காண்பதற்கு முன்பே இருந்ததா அன்றி திடீரென வந்ததா? … இயல்பான பதில் … காதலன் காண்பதற்கு முன்பே இருந்ததுதான்.
அதாவது குழந்தை உணர்வதற்கு முன்புகூட தீ சுட்டுக்கொண்டுதான் இருந்தது … இயல்பான செயலாய்.
பின்பு ஏன் இதுவரை காணப்படவில்லை? அல்லது காண்பவருக்கு தெரியவில்லை?
அந்த தீயின் இயல்பை உணர்ந்து, உணர்வை வெளிப்படுத்தும் அவசியம் --புரிதல் என்ற ஒன்று -- இல்லாததால் ---
தீயின் தன்மையை உணர்ந்து அதை வெளிப்படுத்தும் குழந்தை இப்பொழுதுதான் வந்துள்ளது.
அதனால்தான் புரிதலின் தொடக்கம் எது என்பது கேள்வியாகிறது.
படைப்பின் இயல்பு நிலையும், அதை உணரும் தன்மையும் சேரும் இடம்தான் புரிதலின் தொடக்கம்.
அந்த பெண் இயல்பாகவே அழகாய் இருந்ததும் இருப்பதும் அந்த காதலன் வந்து அதை உணர்ந்து வெளிப்படுத்துவதும் போல.
இங்கு கேள்வி எழுகிறது… குழந்தை உணரவில்லையெனில் தீயின் சுடும் தன்மை இருக்காதா? உணராவிட்டாலும் அது சுடத்தான் செய்யும். எனவே அழகு என்பது படைப்பில் உள்ளதுதான். பார்வையால் அது மெருகேற்றப்படுகிறது.
அதாவது புரிதலில் அதன் பயன் இன்னும் கூடுகிறது. தீ சுடும் என்று உணரும் குழந்தை வரும்போது அந்த தீயின் பயன் செயல்பாட்டில் வருகிறது.
எனவே புரிதலின் தொடக்கம் என்பது
படைப்பிற்கு பிறகு, (பொருள் இருக்கும் நிலைக்கு பிந்தையது) அந்த படைப்பை எதிர்கொள்ளும் நேரம் என்பதுதான்.
அதாவது படைப்பில் அதன் தேவையின் பயனை கூட்டும் தருணம்தான் புரிதலின் தொடக்கம் ஆகும் ..அந்த பெண்ணின் அழகு மன மயக்கத்தை தரத் தொடங்கும் தருணம் என்பது போல.

எனவே அழகு என்பது படைப்பிலும் பார்வையிலும் இருந்தாலும், படைப்பில் இயல்பாகவே உள்ளது. புரிதலின் தொடக்கதில்தான் பார்வைக்கு மாறி வருகிறது.
அழகு என்பது இயல்பு. புரிதல் என்பது ரசனை.
ரசனை தொடங்கும்போது புரிதல் தொடங்குகிறது.

இந்த புரிதல் அவரவர் சிந்தனை, சூழல், மனதின் திறன், படிப்பு, அனுபவம், எதிர்பார்ப்பு இவற்றிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.

தொடரும்…..


சந்திரன் சேகர்

எழுதியவர் : சந்திரன் சேகர் (8-Dec-12, 10:23 pm)
பார்வை : 215

சிறந்த கட்டுரைகள்

மேலே