மரம் வளர்போம்
காடுகள் நிறைந்த திருநாட்டில்
கட்டிடங்கள் நிறைய நான் கண்டேன்;
அதனினும் கொடுமையாய்
மரங்களின் மரணத்தை “தானே”வில் நான் கண்டேன்;
பச்சையாய் கண்ட தோப்புகள்
இன்று “ப்ளாட்”களாக காட்சியளிக்கின்றன;
மக்கள் தொகை பெருகும் இக்காலத்தில்
ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் தேவையா?
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர்!
அதனால் வீணாவது ஒன்றுமில்லையே;
பிள்ளைகள் பிறந்த நாளில்
பரிசாக மரக்கன்று கொடுப்பீர்;
“பசுமைத் தோழன்” மரம் என்றே
மாணவர்களுக்கு உணர்திடுவீர்;
மரம் வளர்ப்போம்! மழை பெறுவொம்!
மரம் வளர்த்தே மனம் நிறைவோம்!!!