மனம் என்பது மாபெரும் சத்தி
நம்மால் முடியுமா என்ற கேள்வி
கனைகளை தொடுக்காதே
மனதில் திடமில்லை என்று
கற்சிலை முன் கண்ணீர் வடிக்காதே
சோம்பலையே தெய்வம் என்று
தொழுது இருக்கும் நீ
வாழ்க்கையில் முன்னேற முடியுமா
முடியும் நம்பிக்கை என்னும் தெய்வத்தை
தொழுது சோம்பல் என்னும் நோயை போக்கிடு
மனம் என்பது மாபெரும் சக்தி அது
உன்னிடம் இருக்கின்றது என்பதை
மறந்து விட்டாயா
இளகிய மனதை இரும்பாக்கிகொள் இன்பமும்
இனிமையும் பொங்கும் புது வாழ்வு பிறக்கும்
மன உறுதியுடன் செயல்பாடு வெற்றி நிச்சயம்
கோவை உதயன்