நாடக...
படியில் பயணம்
நொடியில் மரணம்
என்பதை ஒருவர் எடுத்து
சொல்ல வேண்டுமா
திருடனாய் பார்த்து
திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
என்பது போல
அவரவர் வாழ்க்கை குறித்த அக்கறை
அவரவருக்கு தானே வேண்டும்
ஒருவர் பேருந்தின் படிக்கட்டில் நின்று
பயணம் செய்ய
அவரை அப்படி போகதே
என்று சொல்லாத
இன்னொருவருக்கு தண்டனையா?
என்ன கொடுமை நடக்குது...
தமிழ் நாட்டு நாடக மேடையிலே?.....