புரியா நட்பு
தோழனின் பிரிவில் வாடி தமிழ் கொண்டு கவிதை பல பாடி காயத்தை வெளிபடுத்தும் தோழியின் மனம் ...
தாய் ஆகும் தந்தை ஆகும் ஏன் யாதும் ஆகும் தோழன் எனும் சொல் ..
என்றும் நினைவில் நிறுத்தும் தோழனின் அன்பும் அரவணைப்பும் .... இவை நட்பின் வெளிப்பாடு என்றால் ....
ஆண் பெண் பேதமில்லை நட்பின் இல்லகனம் எனில் சக தோழியின் நட்பையும் அன்பையும் கொண்டாட மறப்பது ஏனோ ...
தோழனின் நட்பு இத்தனை புனிதமாயின் சக தோழி நட்பின் புனிதம் என்ன? ....
இப்படி பல கேள்விகள் பதில் என்றும் ஒன்றே ஆண் பெண் நட்பு என்றும் ..... புரியா நட்பு