நால்வரிக் கிறுக்கல்கள்-கே.எஸ்.கலை

மாபெரும் ஆறு
தமிழகத்துக்கு மட்டும்
கானல் நீர் பாய்ச்சுகிறது
காவிரி !
▓▓▓
இடியோடு மேகம் கருத்தது
மழையைக் காணவில்லை
தூறலில் ஊறியது
விவசாயியின் கன்னம் !
▓▓▓
இனிப்பான காதல்
எப்படி இப்படி
கரிக்கிறது ?
பிரிவு...!
▓▓▓
உலகத்தை மறந்து
காதலிக்கிறார்கள்....
“திறந்த உடல்கள்” சாட்சி
கடற்கரைக் குடையடி !
▓▓▓
விஞ்ஞானம் பிரசவித்த
மின்சார சுடுகாடு...
எரித்துக் கொண்டிருகிறது
வெட்டியானின் வாழ்கையை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (13-Dec-12, 8:06 am)
பார்வை : 428

மேலே