!!!====((( நினைவலைகள் 1 )))====!!!

நான் அதிகம் படிக்கவில்லை, கவிதை எழுதும் ஆவலில் எதையாவது கிறுக்கி வைப்பது எனது வழக்கம், அதுவே ஒரு பழக்க தோசமாகவும் இருந்தது என்றே கூறலாம், நான் கிறுக்குவதை படித்த எனது நண்பர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள், அப்படி அவர்கள் கூறும்பொழுது எல்லாம் நான் தற்பெருமையில் சந்தோசப்பட்டு இருக்கிறேன், இன்றுவரைக்கூட எனக்கு சுத்தமாக இலக்கண இலக்கியங்கள் தெரியாது, கவிதை மரபுகள் தெரியாது அதனால் நான் எழுதுவதுதான் எனக்கு கவிதை, இன்றும் கவிதை எப்படி எழுதுவது என்றுதான் கற்றுகொண்டு இருக்கிறேன், நான் +1 படிக்கும்பொழுதுதான் எனது பொல்லாத நண்பர்கள் சினிமா என்னும் ஆசையை என்னுள் விதைத்தார்கள், ஏனோ அந்த ஆசை என் மனதில் ஈரமண்ணில் போட்ட விதையாய் முளைத்துவிட்டது, திரைப்பட இயக்குனராக ஆக வேண்டுமென்ற ஆசை என் மனதில் முளைத்தது, இந்த விடயத்தை பற்றி தெளிவாக கூற இப்பொழுது என்னிடம் காலம் கையில் இல்லை அதனால் சில விடயங்களை மட்டும் சுருக்கமாகவே கூறிவிட்டு ஓடிவிடுகிறேன்.

2006 புதுக்கோட்டை உமையாம்பிகை தெருவில் இருந்த ஒரு சினிமா கம்பெனிக்கு முதல் முதலாக நான் பாடல் எழுதும் வாய்ப்புக்கோரி சென்றேன், அப்பொழுது எனக்கு அனுபவம் என்பதே சிறிதுமில்லை, ஆர்வகோளாறு மட்டுமே இருந்தது, அறைகூட வேகாத எனக்கு அப்பொழுது அங்கே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டது, நானும் சில மட்டமான பாடல் வரிகளை கைவசம் வைத்திருந்தேன், அவர்கள் நடத்திய சோதனையில் நான் அவர்களின் முன்பு எனது இரண்டு பாடல்களை கேட்கவே சகிக்காத எனது குரலில் ராகத்தோடு பாடிக்காட்டினேன்.

முதல் பாடல்;.

===(பல்லவி)===
==============

என் முதல் காதலி
என் முதல் காதலி
அந்த மூன்றாம் பிறைநிலவு...
என் மன பந்தலில்
என் மன பந்தலில்
அட நாளும் பெருங்கனவு...

மேகமே நீ மறைக்காதே! --(அனுபல்லவி)--
காதல் மனசு தாங்காதே...
இருக்கும்போதே இல்லையென்றால்
என்மனம் தாங்காதே...
அட என்மனம் தூங்காதே.... (என் முதல் காதலி)

---------------- சரணம் -1------------------------

தேனருவி சொட்ட சொட்ட
தேடும்மனது ரெக்கை கட்ட...
வந்தது ஒரு நிலவு
அதுதானோ பெண்ணிலவு !
அட வந்தது ஒருநிலவு
அதுதானோ பெண்ணிலவு...
தென்னை மாவிலை தோரணம் கட்டி
தெருவெல்லாம் நான் பூபந்தால் போட்டேன்
பூமகளே வருக உன் புன்னனையை தருக்க...
போதும் போதும் புன்னகை போதும்
புதுஜென்மம் எடுப்பேன்..
உன்னை மீண்டும் காதலிப்பேன்
உன்னை மீண்டும் காதலிப்பேன்.... (என் முதல் காதலி)

----------------சரணம் 2--------------------

பகலுமெப்போ போய்விடும் போய்விடும்
இரவுமெப்போ வந்திடும் வந்திடும்
தினம் தினம் காத்திருப்பேன்
உனைகான தவம் கிடப்பேன்...
குளத்திலுன்னிடம் பேசி பேசி
கும்மாளம் கொண்டிருப்பேன்!
புதுகவிதைகள் எழுதிருப்பேன்
புதுகவிதைகள் எழுதிருப்பேன்....
உலகையே மறந்து மறந்து
உன்னிடம் நான் பேசும்போது
என்னை நீயும் ஏமாற்றி
வானுக்கு செல்லாதே என்வாலிபம் தாங்காதே
என் வாலிபம் தாங்காதே... (என் முதல் காதலி)

இந்த பாடலை நான் எழுதியபோது எனக்கு மீட்டர் அளவு, பாடலுக்கான மரபு எதுவுமே தெரியாது, ஆனாலும் எனது ராகத்தில் நான் அவர்களிடம் பாடிக்காட்டினேன், பரவாயில்லை நன்றாகத்தான் இருக்கிறது என்றாகள் அது உண்மையா பொய்யா என்று நான் அப்பொழுது ஆராயவில்லை, ஆனால் அந்த பாடல் பாடலுக்கான தகுதியோடு இல்லை என்பதை மட்டும் நான் பிற்காலத்தில் தெளிவாக உணர்ந்துகொண்டேன். அந்த பாடல்வரிகளை இன்றுவரை எந்த மாற்றமும் செய்ய முற்படாமல் அப்படியே இங்கே பதிவு செய்து இருக்கிறேன். இரண்டாவதாக இன்னொரு பாடலையும் அவர்களிடம் பாடிக்காட்டினேன்.

------------பல்லவி--------------

ஆண்;
----------
மேகம் கருக்குதடி
மின்னல் கண்ணை சிமிட்டுதடி
தாகம் எடுக்குதடி
தங்கரதம் உன்ன எண்ணி...
தனிமையிலே நானே தவிக்கிறேனடி மானே
தனிமையிலே நானே தவிக்கிறேனடி மானே....
பெண்;
----------
சிறுமழை தூரல்பட்டு
சிலிர்க்குது இந்த சிட்டு
பெருமழை சாரல்பட்டு
மலருது காதல் மொட்டு
ஏக்கம் என்ன ராசா நான் உனக்குயேத்த ரோசா
ஏக்கம் என்ன ராசா நான் உனக்குயேத்த ரோசா....

----------------சரணம் 1------------------
ஆண்;
---------
இதயம் பறக்குதடி
இன்பம்கான துடிக்கிதடி...
கனவு பிறக்குதடி
கற்பனைகள் வளருதடி...
கானக்குயில் இல்லையே
மனசு தாங்கவில்லையே...
கானகத்தில் தேடுறேன்
கண்ணனுக்கு தெரியவில்லையே...
பெண்;
----------
சாரல் காத்ததுபோல
சமஞ்சபொண்ண ஒரசும்மச்சான்...
அரும்பு மீசைக்காரா
குரும்புபார்வை பாக்குறியே...
கொல்லிமலைகாடு
இந்த குமரிசிட்டு கூடு...
தேடிவந்து பாரு
நான் தேன்கரும்புச்சாறு.... (மேகம் கருக்குதடி)

-------------சரணம் 2--------------------
ஆண்;
----------
கடலூரு கன்னிப்பெண்ணே
கம்பன்வீட்டு சின்னப்பெண்ணே...
தச்சூரு மச்சான்கிட்ட
தலுக்குநட போடாதடி...
சேலகொசவம் உள்ளே
என்னை செருகிகொண்டது நீனா...?
சின்னப்பொண்ணே மீனா
நீ பாடவாடி கானா....
பெண்;
----------
கூட்டுக்குள்ள குயிலிருக்க
கூறபிரிச்சி குதிக்கிறியே...
அக்கம்பக்கம் தெரிஞ்சிபுட்டா
அடிமைப்பட்டு நிக்கனுங்க...
மானம்போகும் தன்னாலே
தரமுடியுமா உன்னாலே...?
தாலிக்கயிறு தந்தாலே
தவழுவேனே மடியிலே.... (மேகம் கருக்குதடி)

இந்த பாடலையும் எனது விளங்காத குரலால் அவர்களிடம் பாடி காட்டினேன், கொஞ்ச நாட்களுக்கு பிறகு திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி இசை வாத்தியங்களின் உதவியோடு ''என்மனசு மச்சானே'' என்ற ஆல்பம் உருவாக்கி எனது தோழர்கள் வெளியிட்டார்கள், மேகம் கருக்குதடி என்ற எனது இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு ஒலி நாடாவில் கேட்க நேர்ந்தது. எனக்கு தகுதி இருக்கிறது என்று நான் என்னை உணர்ந்து கொள்ளாமல், சினிமா வாய்ப்புத்தேடி தொடர்ந்து விடா முயற்ச்சியில் ஈடுபட்டேன்...


(அடுத்த பாடல் பற்றிய விபரத்தை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன், நன்றிகள்)

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (13-Dec-12, 1:32 pm)
பார்வை : 241

மேலே