தோழிக்கு ........

உன்னை ஒப்பிட்டு காட்டும் உவமை
எதுவுமில்லை இவ்வுலகில் ....

உயிரோட்டமாக நினைவிலும்
உதிரோட்டமாக உடலிலும் தவழும் உன்னை

ஒப்பிட்டுக்காட்டும் உவமை
ஏதும் இல்லை இவ்வுலகில் .......

கடவுளாக நினைக்க நினைத்தால்
கடைசி வரை தெரியாது போவாய்!

என் கவிதையாக நினைத்தால்
கண்ணீராகவே மலர்வாய் !

கனவாக நினைத்தால்
பகலாகிப் போவாய் !

உன்னை நிலவாக நினைத்தால்
தூரமாகிப் போவாய் !

தோழியே ....
என்னுடன் நீ இருந்த நிறைந்த நாட்களை எண்ணி
இனிவரும் என் குறைந்த நாட்களை ஓட்டும் நான்

உன்னை என் மௌனமாகவே
நினைக்கிறேன் ....

விடை கூறாது சென்ற உன் பிரிவை
விதியின் வழியே விட்டு .....

என் மீதி நாட்களை மௌனமாகவே
கழிக்கிறேன் ......

நீ என்னை விட்டுப் போன நாட்களிலிருந்து .......
விடுத்துப் போய்விட்டது என் வீம்பும் ..வீரமும் ....

கைகோர்த்து சாலையில் நடக்கும்
நண்பர்களைக் கடந்து ....

கனமான மனதுடன் ...
வெகுதூரம் நடக்கிறேன் .......
தனியாக அல்ல !தோழியே உன் நினைவுகளுடன் ......

கடவுளிடம் நான் கெஞ்சி கேட்பதெல்லாம் .....
கடினமான என் வாழ்வின் நாட்களை
கருணையுடன் குறைக்க வேண்டும் என்பதே .......

எழுதியவர் : ப ராஜேஷ் (13-Dec-12, 2:42 pm)
Tanglish : thozhiku
பார்வை : 776

மேலே