நட்பு

நட்பு

தொப்புள் கொடிக்கு அடுத்து
தோல் கொடுத்த உறவு !

எங்கெங்கோ பிறந்து எம்மொழியும்
எவ்வினமும் ஒன்றாய் சேர்க்கும்
ஒற்றை மந்திர வார்த்தை !

இங்கே தட்டி கொடுப்பதும்
விட்டு கொடுப்பதும் தாரக மந்திரம்
நட்பின் தியாகத்திற்கு
உயிர் கூட துச்சம்தான் !

எதிர்பார்ப்புகள் இல்லாத
சுதந்திர பறவைகள்
ஆயிரம் உறவு முறைகள் இருந்தாலும்
இவர்களின் உறவுமட்டும்" மாமன்""" மச்சான் !

இது உயர்ந்தவன் தாழந்தவன்
இருப்பவன் இல்லாதவன்
கற்றவன் கல்லாதவன்
என்கிற வேறுபாடுகள் இல்லாத சமாதான உலகம்!

பசுமை குன்றாத நினைவுகளாலும்
பாசம் நிறைந்த அன்பாலும்
இவர்களின் நட்புக்கு வயதில்லை
என்றுமே இளமை!

அன்னை இல்லாதவர்களும் உண்டு
தந்தை இல்லாதவர்களும் உண்டு
உறவுகளே இல்லாதவர்களும் உண்டு
ஆனால் நட்பு இல்லாமல் உலகமே இல்லை !

பெற்றவனையும் உடன்பிறப்பையும் கூட
எளிதாய் இழக்கும் மனம்
ஒரு நண்பனை இழப்பது நடக்காது
"நட்பு வாழ்க ",
நட்பை போற்றுவோம் நண்பனாகவே இருப்போம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Dec-12, 7:07 am)
பார்வை : 410

மேலே