என் அம்மாவின் கனவு..........!

குழந்தையாய் நான் இருந்த போது ,
என்னை கொஞ்ச கூட நேரம் இல்லையாம் .
பாவம் அவள் என்ன செய்வாள் !
என்னை கொஞ்சும் நேரம் கூலி வேலை செய்தால் தான் , அன்று என் குடும்பத்தில் அடுப்பு எரியும் .
ஐந்து வயதில் மகன் பள்ளிக்கு போவான் ,
இருபது வயதில் இந்த அன்னைக்கு அரை வயிறு கஞ்சி ஊத்துவான் என்று ஏங்கி கொண்டு இருந்தால் ,
கையில் காசோலையுடன் , ஆசையாய் ! நான் அவளை பார்க்க வரும்போது ,
அமைதியாய் உறங்கி கொண்டு இருக்கிறாள்..........
கல்லறையில் !
பாவம் ஓய்வு இன்றி உழைத்தவள் அல்லவா ,
இப்பொழுதாவது ஓய்வு எடுக்கட்டும் என்று ,
கண்ணீருடன் என் காலங்களை கடந்து கொண்டு இருக்கிறேன் .

எழுதியவர் : ஹிமேஷ் அருண் (14-Dec-12, 10:37 am)
பார்வை : 163

மேலே