உள்ள உணர்வுகள்

உள்ளத்தை உருக வைக்கும் உணர்வுகள்,
உணர்வுகளுக்கும் வடிகால் தரும் இதயம்,
இதயத்தை ஏங்க வைக்கும் நிகழ்வுகள்,
நிகழ்வுகளால் வெதும்பி நிற்கும் மனம்,

மனத்தால் நினைக்க முடியாதபடி உண்மைகள்,
உண்மையாய்,தன்மையாய், விட்டுக் கொடுக்கும்
சிலர், அந்த சிலரால் வாழும் உலகம்,
இந்த உலகத்தில் வாழும் நாம்!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (14-Dec-12, 7:38 pm)
Tanglish : ulla unarvukal
பார்வை : 110

மேலே