விழிகள்
மனதிற்கு வாசல் கண்களாம்,சிலர்
மனதிற்கு திறவுகோல் கண்களாம்
உள்ளதை சொல்லும் கண்களாம் சிலர்
உள்ளத்தை மறைக்கும் கண்களாம்
கதைகள் பேசும் கண்களாம் சிலர்
கதைகள் அளக்கும் கண்களாம்
விதைகள் விதைக்கும் கண்களாம் சிலர்
வினைகள் விதைக்கும் கண்களாம்
கண்களே எதற்கும் கதவுகளாம்

