குறுங்கவிதைகள்

நான் ஆசைப்பட்ட
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!
_____________________


உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!
_____________________


உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!
_____________________


நான் ஆசையாசையாய்
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?
_____________________


ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்...!
_____________________


ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்...!
_____________________


புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது...!
_____________________


எங்கு தொடங்குகிறது
என்பதை அறியும் முன்னரே
முறிந்து விடுகிறது
ஒருசிலரின் காதல்...!

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 12:01 pm)
சேர்த்தது : emalathithan
பார்வை : 464

மேலே