தலைக்கனம்

என் போல் யார் உண்டு
நானே உயர்தவன் என்று
கர்வம் கொள்ளாதே

யானைக்கும் அடி சறுக்கும்
மறந்துவிடாதே

என்னால் மட்டுமே முடியும்
என்று எண்ணிவிடாதே

தான் என்ற எண்ணம் கொண்டவர்
எவரும் உயர்ந்ததும் இல்லை

தன்னடக்கம் கொண்டவர் எவரும்
வீழ்ந்ததும் இல்லை

நிறைகுடம் ததும்பாது போல்
முழுமை அடைந்த எவரும்
கர்வம் கொள்வது இல்லை

தன்னடக்கம் தலைமை ஏற்கும்
தலைக்கனம் உன்னை வீழ்த்தும்
மறந்துவிடாதே

-கோவை உதயன் -

எழுதியவர் : (15-Dec-12, 6:28 pm)
பார்வை : 2175

மேலே