..............உன் பின் பலம்.............

பரிதாபத்திற்குரிய உறவு என்னுடையது உனக்கு !
அதை உன் பார்வை அடிக்கடி சொல்கிறது வெளிப்படையாய் !!
உன்னிடம் நான் அடங்கிக்கிடத்தலின் காரணம் !
ஒருநேரம் இல்லை ஒருநேரம் நீ காட்டும் அன்பும் அரவணைப்பும் !!
அதோடு ஆதாரத்திற்கெனயிடும் பிடி சோறு !
உன் வீட்டைக்காப்பதால் வேலைக்காரன் என்றாகிவிடமாட்டேன் !!
திருடர்களை அச்சுறுத்த அசகாயசூரன் என்போல முடியாது உன்னால் !
நள்ளிரவில் குறைக்கவும் குதறவும் முடியுமா எளிதாய் !!
குறைத்து மதிப்பிடாதே எனை !
நான் ஒளிபொருந்திய கண்களுடன் தீவிணை அணுகி,
உன் குலம் காப்பாற்றும் வீர நாய் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-Dec-12, 7:24 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 180

மேலே