செக்கிழுக்கும் கரையான்கள்(உரிமையின்குரல்)
ஈமச்சாவு
கேட்டோம்..............!!!
ஈனச்சாவினால்
ஈயினில்
மொய்த்தோம்.....!!!
ஈர நிலம் ஆறாமல்
கிடக்கிறோம்......!!!
உள்ளத்துயரத்தால்
உருகி வாழும்
உளியாய்
ஆனோம்...............!!!
எடைக்கல்லை
உடைத்து விட்டு
எறும்புமுட்டையை
எடுத்து அளக்கும்
ஏய்ப்புத்தராசுகளாய்
ஆனோம்................!!!
நக்கித்திங்கும்
நாயிடமும்.....
நாத்திகம் பேசும்
நஞ்சக நரியிடமும்
வஞ்சகமாய்
ஆனோம்...................!!!
தெருவில் தீயை
மூட்டியே
முகம்கருகிவாழும்
பூச்சிகளானோம்...........!!!
திண்ணசோற்றை திருடி வாழும்
மேதைகளானோம்.......!!!
துப்பாக்கியில்
கருவம் துடைக்கும்
பலிகெடா ஆனோம்....!!!
செல்லும்வழியெங்கும்
செக்கிழுக்கும்
கரையான்களாய்
ஆனோம்...............!!!
கல்வியின்
கட்டுத்தரையிலே
கிடக்கும்
புழுக்கைகள்
ஆனோம்.............!!!
கள்ளித்தசைகள்
கவி எழுதும்
பேனாவிலே வாழும்
மைத்துளிகள்
ஆனோம்............!!!
சுறுக்குகயிற்றின்
மத்தியில் வாழும்
சுள்ளெறும்புகளாய்
ஆனோம்...........!!!
கிழிந்த செருப்பிலே
சிக்கனமும்......
கிழிந்தஆடையிலே வாழும்
கோவணமாயும்
ஆனோம்.........!!!
கழிப்பறை வசதியிலே
கட்டுச்சோறாய்
ஆனோம்........!!!
கொத்துக்கொத்தாய்
கொள்ளைபோகும்
பேய்களாய்
ஆனோம்.......!!!
முழுநிலத்தையும்
மூட்டை கட்டிய
கோணிகளிடம்
காணியிழந்து
போனோம்....!!!
பசியோடு வந்த
பரதேசிகளாய்
போகும்
இடம் தெரியாமல்
போனோம்.....!!!
இறுதியில்
கடவுளைத்தேடி
கலியுகம் கடந்து
போனோம்......!!!
களவரத்தால்கடவுளும்
கால்
ஒடிந்துகிடக்க
கண்டோம்......!!!
ஆதிஅந்தம்
உடையவனே
ஞாதியத்து
போகக்கண்டோம்....!!!
சாதிகள் மொய்த்த
சாத்தானிடமே
சாமிகள்
சறுக்கி விழுவதை
கண்டோம்....................!!!
நியாயமாய் பேசிய
வீரவசனங்களே
அநியாயமென
அழுத பிறகே
கண்டோம்................!!!
போதும் போதும்
ஆமைகளே.............!!!
வாருங்கள் வாருங்கள்
ஊமைகளே............!!!
துக்கதினம்
அனுசரிக்கும்
துவக்க விழாவாம்
தூக்கிலிட்டு
தொங்கினால்தான்
துவங்குமாம்..........!!!
வாருங்கள் வாருங்கள்
தூக்கிலிட்டுக்
கொண்டாவது
நிம்மதியாய்
தூங்குவோம்..........!!!