கம்பிக் கூட்டில்

அருமையண்ணையோடு
- கட்டிய சீட்டில்
ஆவணியில் அப்பா
- வாங்கிய கட்டில்
ஆச்சியும் அப்புவும்
- பாவித்த தொட்டில்
அத்தனையும் அவன்
- கட்டுப்பாட்டில்

சும்மா இருந்தாலும்
- வீட்டில்
தினம் தேடிப்பிடிக்கிறான்
- புலியெனும் சாட்டில்
ஆமியும் பொலுசும் அடிக்கடி
- தேடுதல் றோட்டில்
அதனால் பதற்றம் அந்த
- இலங்கை எனும் நாட்டில்

அங்குள்ள கூலிப்படைகளின் சீண்டிடும்
- துப்பாக்கி சூட்டில்
அகதிகளாய் இன்னும் சிலர்
- றோட்டில்
அந்தஸ்து கோரி பலர்
- அவுஸ்ரேலிய நாட்டில்
அகதிகளில் அடங்கும் அடியேன் நான்
- இன்னும் கம்பிக் கூட்டில்

நச்சப்படாவுலகிலே அச்சப்படதிருந்தோம்
- நம் கட்டுப்பாட்டில்
அன்றே நல்ல முடிவெடுத்திருக்க வேண்டும்
- நம் சொந்த நாட்டில்

செய்தது தவறாகிச்சட
- தம்பி
எய்த அம்பு வந்ததுணடா
- திரும்பி
இழந்த சந்தர்ப்பம் வருவதுண்டா
- விரும்பி
கடந்த வாழ்வும் வந்திடாது
- திரும்பி.

எழுதியவர் : மன்னார் ஸ்ரீ (16-Dec-12, 2:41 pm)
சேர்த்தது : srith2020
பார்வை : 128

மேலே