இயற்கை வர்ணனை ...

மழையே என்று நினைக்கும் பொழுது
என் மனம் சிலிர்க்கிறது
அதன் பெயர் சொல்லும் தருணத்தில்
என் உடல் சிலிர்க்க வேண்டும்


உன்னிடம் கடன் வங்கி ஏமாற்றி
விட்டார்களோ தெரிய வில்லையே ?
கடைகளை எல்லாம் அடித்து செல்கிறாய்
வெள்ளம் என்ற பெயரில் ஏனோ

மழையில் நனைந்தேன் என்மனம் கரைந்தேன்
மாலையில் இதமாய் தென்றல் வீச
மாணிக்கமாய் நட்சத்திரம் ஜொலிக்கும்
அந்த இனம்புரியா நேரத்தில்

வெண்ணிலவின் வெளிச்சம் பட்டு
ஆபரணமும் ஆடைகளும் கொண்டதுபோல்
பூச்செடிகள் பூத்துக்குலுங்கும்
இரவு முழுதும் நிலவு சிந்திய

வியர்வை துளியை ! பனித்துளியாய் !
தன் மீது தாங்கியது புட்கள்
காலையில் சூரியன் எழுந்து
பாரமாய் இருந்த துளிகளை

தன் கதிர்களால் விளக்கி
செல்ல புட்களை எழுப்ப
எழுந்து நின்று நன்றியை
வெளிப்படுத்தியது புட்கள் ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (16-Dec-12, 3:14 pm)
பார்வை : 658

மேலே