காதல்....

நண்பர்கள் மத்தியில்
நானுன்னை ரசிப்பதும்
நீயென்னை ரசிப்பதும்
இதயமிரண்டும் இடமாறியதுடன்
நான்குகண்கள் போராட்டம்தானென்ன?

நீயுன் நண்பர்களுடன்
கடற்கரை மணலில்
கலகலவென பேசிசிரிக்கையில்
எனைக்கண்டதும் நீ
தடுமாறிப்போனதென்ன?

வார்த்தைகளால் சொல்லமுடியாததை
வாழ்த்து அட்டையால்சொல்லியும்
புரிந்துகொண்ட நீ பதிலின்றி
புன்னகையொன்றை பூக்கிறாய்
அதனர்த்தம் தானேன்னடி?

நள்ளிரவில் நாசுக்காய்
அலைபேசியில் அழைத்து
நாளைகாலை சந்திப்போமென்கிறாய்
நிமிடநொடிகள் நிசப்தமாய்
இதயமெங்கும் கனவுகளோடு நீளுகிறதடி...

சொல்லவந்ததை சொல்லாமல்
மௌனமாய் சிரிக்கிறாய்-எனை
மர்மப்புன்னகையுடன் ரசிக்கிறாய்
கொன்றது போதும் சொல்லிவிடு
காத்திருக்கிறேன் கைப்பிடிக்க கணவனாக...

எழுதியவர் : சுபா பூமணி (17-Dec-12, 5:28 pm)
பார்வை : 152

மேலே