வான் மறைத் தழுவல்கள்...
அகிலம் படைத்தோனே ஆதி இறையோனே
அருட்பெருந் தெய்வே போற்றி.
கருவாக்கி உருவாக்கி உதிரம் தன்னை
உணவாக்கிய தாயே போற்றி.
இல்லார் கல்லார் ஒல்லார் அவனியில்
இல்லாமல் செய்தல் தலை.
விரைந்தே விட்டகலும் நம்மை உடல்
வருந்தா வந்த பொருள்.
எம்மொழி செம்மொழி அம்மொழி கற்கினும்
தாய்மொழி அவற்றுள் தலையே.
ஊன் கூன் விழுந்தாடிப் போயினும்
தன் மானம் போற்று.
அறவழி போற்றி மறைவழி நடந்தால்
இறைவழி காண் பாய்.
தன்னிலை நோக்கி தொலைநோக்கி ஆற்றுவார்
நன்னிலை காண்ப தெளிது.
நம்பிக்கையுள் நன்னம்பிக்கை தன்னம்பிக்கை அந்நம்பிக்கை
நம்பிக்கையுள் எல்லாம் தலை.
செல்லுக செல்லிடம் அறிந்து அஃதிலால்
செல்லின் செல்லாமை நன்று.