சோகம் நிறைந்த வாழ்வில் சொந்தங்களும் கை கொடுக்க வில்லை.

சோக உணர்வோடு
சோந்து கிடந்த
உள்ளங்கள் நாங்கள்.
எங்கள் சோக உணர்வை
சொல்லி அழுதோம்.
அகிலமெங்கும் பார்த்து-சிரித்தது
முதலைக் கண்ணீர் வடித்தர்கள்.

தசைகளும் சிதரியது.
மண்டையோடுகளும் -சிதரியது.
சின்னஞ்சிறு பாலகனும்-சிதரியது.
காய்த்துக் குலுங்கிய
தென்னை மரங்களும்
நிறைமாத கார்பினிக்கு-நாவில் சுவையூட்டும்.
புளிய மரங்களும்.
காற்றுக்கு இசைபாடும் பணை-மரமும்
வாடிக் கருகிப் போனது.
எங்கள் சோக உணர்வை-புரிந்து கொண்ட.
எங்கள் சொந்தங்கள் -கூட.
எங்களுக்கு-கைகொடுக்க வில்லை.

அவலக்குரலும் மரணபயமும்.
ஒருமித்து சங்கமித்தது.
எங்கள் வாழ்வில்.
கூப்பிட்டு கூப்பிட்டு-அழுதோம்.
கூவி கூவி குறைகளைச் சொன்னோம்.
அது புறக்குடத்தில் -ஊற்றிய
நீராக பயணற்றுப் போனது.

வாழ்வா சாவா என்ற
மரண வட்டத்துக்குள்
இலங்கை தீவில் சிக்கித் தவித்தோம்
இரத்த கறை படிந்த உடையுடனும்
கிழிந்த உடையுடனும்.
வீதியோரத்து அனாதைகள் -போல.
கையில் உயிரை பிடித்த -வண்ணம்
கை நழுவினால் உயிர் -நழுவும்.
என்ற மரண ஏக்கத்துடன்.
கரைபுரண்டோம்.

தெரிந்த எம் சொந்தங்கள் -கூட
எம் வாழவில் கைகொடுக்கவில்லை.
அதனால் மந்தைகள் வாழும்
குடிசையில் வாழ்கிறோம்.
எம் சொந்தங்கள் கைகொடுத்திருந்தாள்.
இப்போ.அழகாக மனிதன் -வாழும்
வீட்டினில் வாழ்வோம்.
இந்த நிலை எப்போது
தீரும்இறைவா?????

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எழுதியவர் : -ரூபன்- (19-Dec-12, 5:31 pm)
சேர்த்தது : கவிஞர் தரூபன்
பார்வை : 303

மேலே